மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஸ்கார் நாயகனின் அசத்தல்!. குவிந்துவரும் பாராட்டுகள்!.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 450க்கும் மேற்பட்ட பலியானதாகவும், 7 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மத்திய அரசு, கேரளாவில் ஏற்பட்ட இந்த பேரழிவை, தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது. இதனையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவர்களால் முடிந்த நிவாரண நிதியை அளித்துவந்தனர்.
இந்த வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் உதவிகளும், நிவாரண பொருட்களையும் கொடுத்து உதவி வருகின்றனர். கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
அங்கு மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஏ.ஆர்.ரகுமான், ரூ.1 கோடி கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். அவர் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவெள்ளத்தை பற்றி பாடியதால் கேரள சம்பவம் உலக அளவில் தெரியவந்தது.