திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பலவீனத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லை; கம்பவுண்டர் அதிர்ச்சி செயல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், 22 வயது இளம்பெண் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண்ணிடம் கம்பவுண்டர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இளம்பெண்ணின் உடல் அங்கங்களை தொட்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நிலையில், அங்கிருந்த கேமிராவில் வீடியோ பதிவாகியுள்ளது.
உடல்நலம் குன்றியிருந்த பெண்மணி தன்னால் எதுவும் செய்ய இயலாமல் தவித்த நிலையில், கம்பவுண்டர் அங்கிருந்து சென்றதும் குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்களிடம் இளம்பெண் நடந்ததை கூறி இருக்கிறார்.
இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு, காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி கம்பவுண்டராக பணியாற்றிய சோயிப்-பை கைது செய்தனர்.
கைதான சோயிப் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக பணியில் சேர்ந்துள்ளார். அவரை மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாகவும் அறிவித்துள்ளது. நடந்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.