பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
16 வயது மகளுடன் வசித்துவந்த கைம்பெண் பலாத்காரம்; உடலெல்லாம் கடித்து கொடூரம்.. கயவனுக்கு மாவுக்கட்டு.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, தெற்குபொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண்மணி, பிழைப்புக்காக இட்டிலி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கணவரை இழந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த 19ம் தேதி இரவு நேரத்தில் சிறுமியின் தாய் மாவு அரைக்க சென்றுவிட்ட நிலையில், வீட்டில் சிறுமி உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அச்சமயம் உள்ளே வந்த மர்ம நபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ந்துபோன சிறுமி வீட்டின் கொல்லைப்புறம் வழியே உறவினரின் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பயத்தில் உறைந்தவாறு நின்றுள்ளார். இதனிடையே, சிறுமியின் வீட்டு வாசலில் தூரமாக நின்ற கயவன், சிறுமியின் தாய் வீட்டிற்கு வருவதை நோட்டமிட்டுள்ளார்.
உடலெல்லாம் கடித்து கொடுமை
பின் சிறுமியின் வீட்டிற்குள் அவரின் தாயை நோக்கி சென்ற கயவன், கைம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் தாயின் கட்டை விரலை கடித்து துண்டித்து, உடலில் பல இடங்களில் கடித்து கொடுமை செய்து இருக்கிறான். வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கயவன், பின் அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பி சென்றுள்ளான்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை சீரழித்த இராணுவ வீரர்; திருமணத்திற்கு மறுத்தால் காவல் நிலையம் முன் மோதல்.!
பின் ஒருவழியாக சிறுமி தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் உதவிகோரிய நிலையில், அவர்கள் வந்து பார்த்தபோது சிறுமியின் தாய் உடலில் காயங்களுடன் பரிதவித்து இருக்கிறார். பின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தவர்கள், விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தப்பியோட முயற்சித்து தடுமாறி விழுந்ததில் கை-கால் எலும்பு உடைந்தது
மாவட்ட எஸ்.பி தலைமையில் ஆய்வு நடைபெற்று குற்றவாளியை கண்டறிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் முத்துக்குமார் (29) என்பவனை கைது செய்துள்ளனர். சிறுமியை சீரழிக்கும் எண்ணத்துடன் இருந்த முத்துக்குமார், பிழைப்புக்காக பொய்கைநல்லூர் வந்த சமயத்தில், சிறுமியின் வீட்டில் நோட்டமிட்டு காரியத்தை அரங்கேற்றி இருக்கிறான்.
தனிப்படை காவல்துறை சீர்காழி பகுதியில் சுற்றிய முத்துக்குமாரை கைது செய்த நிலையில், கைதின்போது தப்பியோடி கை-கால்களை உடைத்துக்கொண்ட குற்றவாளியை மீட்டு மனிதாபிமானத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடி நீதிகேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம், கடையடைப்பு, சாலை மறியல், மாதர் சங்க போராட்டம் என உறவினர்கள் களமிங்கியதால் நாகையே பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: மருமகள் மீது நடத்தை சந்தேகம்; 1 வயது பேத்தியின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு கொன்ற தாய்க்கிழவி..!