மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்திராயன் 2 வின் தற்போதைய நிலை என்ன? இஸ்ரோவுடன் இணைந்த நாசா! புது அப்டேட்!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் 2 என்னும் விண்கலனை சில நாட்களுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பியது. வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த சந்திராயனின் விக்ரம் லேண்டர் என்னும் பகுதியை நிலவில் தரையிறக்கும்போது கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டர் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.
உலகமே இந்தியாவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் எதிர்பாராத தோல்வி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரோவுடன் இணைத்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கவும், அதனுடன் தொடர்புகொள்ளவும் முயற்சித்தது.
மேலும் நாசா இதற்கு முன்னர் அனுப்பிய ஆர்பிட்டரை கொண்டு விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முயற்சி செய்தது. ஹெலோ விக்ரம் என குறுந்செய்தியை அனுப்பியது. இந்நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றும், விக்ரம் லேண்டரை படம் பிடிக்கவும் முடியவில்லை என்று நாசா கைவிரித்துவிட்டது.