மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதைப்பொருள் விற்பனை சந்தையாக இந்தியா?? கடல், தரை, எல்லை என..., பரபரப்பு தகவல்.!
போதைப்பொருள் கடல் வழியாகவும், தரை மற்றும் எல்லைப்பகுதிகள் வழியாகவும் இந்தியாவிற்குள் கடத்தப்பட்டு வருகின்றன என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெருமளவு அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் உள்ள மேலை நாடுகளிலும் போதைப்பொருள் கடத்தல் மாபியா கும்பலின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ள சூழலில், சட்டவிரோதமாக அவை கடத்தப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையின் நிர்வாக இயக்குனர் எஸ்.என் பிரதான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெரிய அளவில் தொடங்கி இருக்கிறது.
போதைப்பொருள் கடல் வழியாகவும், தரை மற்றும் எல்லைப்பகுதிகள் வழியாகவும் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடத்தல் Darknet மூலமாக நடைபெறுகிறது. மேலும், பார்சல், கூரியர் போன்றவற்றைலும் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தலுக்கான பணத்தை பெறுவதும், அன்புவதும் க்ரிப்டோ கரன்சி மூலமாக நடைபெற்று வருகிறது. அதனை நாங்கள் கண்காணித்து வருகிறோம். போதைப்பொருளை இந்தியாவில் நுழையவிடாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.