மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாலி கட்டிய கையோடு மதுக்கடையை தேடி ஓடிய புதுமணதம்பதி.. "குடி"மக்களாக மணமானதும் முதல் சம்பவம்..!!
திருமணம் முடித்த தம்பதிகள் இன்றளவு தங்களுக்கு பிடித்த வகையில் பல்வேறு வகையான முறைகளில் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்தம்பதிகள் மற்றவர்களை விட சற்று வித்தியாசமாக ஏதும் செய்யவேண்டும் என நினைத்தனர்.
அந்த வகையில், திருமணம் முடித்த கையோடு மதுபான கடைக்கு சென்று மதுபானம் வாங்கியுள்ள வீடியோவானது சமூகவலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஒருபுறம் அவர்களுக்கு ஆதரவு, மற்றொருபுறம் எதிர்ப்பு என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.