ரயில் பயணிகளுக்கு உற்சாக செய்தி! உங்களுக்காகவே வாட்சப்பில் புதிய வசதி அறிமுகம்



new update to get train details in whatsapp

உலக அளவில் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் மெசேஜ் ஆப் வாட்சப்.  இதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். மேலும் இந்தியாவில் தான் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் இந்தியர்களுக்கென பிரத்தியேகமான ஒரு வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் புக்கிங் செய்யும் பொழுது காத்திருப்போர் பட்டியலில் ஒருவரது பெயர் வந்துவிட்டாள் அவருக்கு டிக்கெட் கிடைத்து விட்டதா என அடிக்கடி இணையத்திற்கு சென்று பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது இதனை எளிதில் தெரிந்துகொள்ள வாட்சப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் மூலம் பயணம் செய்பவர்கள், இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் குறிப்பிட்ட ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும்.

Whatsapp

இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி, மேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ்அப் மூலம் ரயில் சேவை குறித்தான தகவல்களை அளிக்க வழிவகை செய்துள்ளது. 

பிஎன்ஆர் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வதற்கான எளிய வழிகள்:
1.உங்கள் மொபைலில் உள்ள கான்டேக்ட்ஸில் மேக் மை ட்ரிப் தளத்தின் வாட்ஸ்அப் எண்-ஐ 7349389104  சேமித்துக் கொள்ளவும்.

2.இதையடுத்து, வாட்ஸ்அப்-க்குச் சென்று, மேக் மை ட்ரிப் எண்ணுக்கு மெஸேஜ் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

3.பிஎன்ஆர் (PNR) என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு உங்களது பிஎன்ஆர் எண்ணை தட்டுங்கள். பிறகு மெஸேஜ் அனுப்புங்கள்.

இதையடுத்து, உங்களது பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தானாகவே தெரியபடுத்தப்படும்.

Whatsapp

ரயில் சேவை குறித்தான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:

1.முன்னர் போலவே, மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் எண் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் சாட்டுக்கு சென்று ரயில் எண்ணை மட்டும் தட்டி அனுப்புங்கள். சிறிது நேரத்தில் எப்போது ரயில் கிளம்பியது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அது வந்து சேரும், எப்போது உங்களை இலக்கை அடைவீர்கள் உள்ளிட்டத் தகவல்கள் தெரியபடுத்தப்படும்.

சில நேரங்களில் பதில் வர தாமதமாகலாம். ஆனால், அது சாதரணமானது தான். இந்த வசதியை பயன்படுத்துவதற்கு முன்னர் வாட்ஸ்அப் செயலியின் கடைசி அப்டேட்டை தரவிறக்கம் செய்துவிட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த அனைத்து சேவையையும் வாட்ஸ்அப் இலவசமாகவே தனது பயனர்களுக்குக் கொடுக்கிறது.