இந்தியாவில் முதன்முறையாக தங்க நாணயம் வழங்கும் ஏடிஎம் மையம் அறிமுகம்... எங்கு தெரியுமா.?



Newly announced purchase of gold coins in ATM

இந்தியாவில் முதன்முறையாக தங்க நாணயம் வழங்கும் ஏடிஎம் மயமானது ஹைதராபாத்தில் அறிமுகமாகியுள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல் மற்றும் பணத்தை செலுத்துவதை மட்டும் நாம் பார்த்திருப்போம். தற்போது புதிதாக ஏடிஎம் மையத்தில் தங்க நாணயம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது.

கோல்ட் சிக்கா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ஓபன்கியூப் டெக்னாலஜி என்ற தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் ஹைதராபாத்தில் உள்ள அசோகா ரகுபதி சேம்பர்ஸில் இந்த தங்கம் வழங்கும் ஏடிஎம் மையம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மின் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கம் வாங்கலாம்.

Gold coins

இது குறித்து இந்நிறுவனத்தின் சி.இ.ஓ தரூஜ் கூறுகையில் பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால், சிறிய அளவில் தங்கத்தை வாங்க பெரிய கடைகளுக்குச் செல்வதில் தடைகள் இருக்கிறது. எனவே இந்த ஏடிஎம் எளிமையான தீர்வாக இருக்கும் என்று நினைத்து இந்த தங்க ஏடிஎம் மையத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த ஏடிஎம்மில் ஒருவர் தங்கத்தை வாங்க முயற்சி செய்கையில், அந்த நாணயத்தின் மதிப்பு தற்போது இருக்கும் சந்தையின் மதிப்போடு திரையில் தெரியும் என்றும் கூறியுள்ளார். இந்த தங்க ஏடிஎம்மானது அடுத்ததாக ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையம், கரீம்நகர், வாரங்கல் ஆகிய மூன்று இடங்களிலும் இந்தியா முழுவதும் இன்னும் இரண்டு வருடங்களில் 3,000 தங்க ஏடிஎம்கள் நிறுவ திட்டம் வைத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.