மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓரினச்சேர்க்கை பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞன்! திருமணமான சில நாட்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி புதுப்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் தனது மனைவி காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கணவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளம்பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் இறுதினங்களுக்கு முன் போலீசார் அந்த இளம்பெண்ணை ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் கண்டுப்பிடித்தனர்.
போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போன இளம்பெண் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஓரினசேர்க்கையாளர்கள் என தெரியவந்தது. அந்த இளம்பெண் கூறுகையில், தன்னுடைய தோழியை 4 ஆண்டுகளாக தான் காதலித்து வருவதாகவும், தனது விருப்பத்துக்கு மாறாக தனக்கு திருமணம் நடந்ததாகவும் கூறினார். இதனையடுத்து பெண்கள் இருவரும் தங்களின் விருப்பமான முடிவை எடுக்கலாம் என கூறி இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டனர்.