மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான ஒரே வாரத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வெங்கடபூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாலக்கிரண். இவருக்கும், காவியா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு மார்ச் மூன்றாம் தேதி சமீர்பேட்டையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் புதுமண தம்பதிகள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பியுள்ளனர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து திருமலை கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் லாரி நின்றதை கார் டிரைவர் கவனிக்காததால், லாரி வீடு கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த அனைவரின் உடல்களையும் இணைத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.