மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தெலுங்கானா, ஆந்திராவில் 60 இடங்களில் தொடரும் அதிரடி சோதனை: என்.ஐ.ஏ அதிகாரிகள் தடாலடி.!
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட இடத்தில் இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்சல் வழக்கு தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் காலை முதலாக நடத்திவரும் சோதனை காரணமாக இரண்டு மாநிலங்களிலும் பரபரப்பு சூழல் உருவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், நெல்லூர், திருப்பதி மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனையின் முடிவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் நடவடிக்கைக்கான காரணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக விபரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#WATCH | National Investigation Agency (NIA) carried out searches at more than 60 locations in Andhra Pradesh and Telangana in Left Wing Extremism (LWE) case.
— ANI (@ANI) October 2, 2023
(Visuals from Subhash Nagar, in Hyderabad's Alwal) pic.twitter.com/RY7rtvDr91