#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதல் மனைவி சயனைடு கலந்து கொலை; 20 இலட்சம் வரதட்சணை கேட்டு கணவன் அதிர்ச்சி செயல்.! தவிக்கும் கைக்குழந்தை.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பென்னட் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா பர்வீன் (22). இவரின் கணவர் இம்ரான் கான் (27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, ஆசிகா தனது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனுடைய கடந்த 23ம் தேதி இளம்பெண் மர்ம மரணம் அடைந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கிணற்றில் விழுந்த ஆடை மீட்கச் சென்றவர் பரிதாப பலி; கயிறு அறுந்துபோனதால் துயரம்.!
சயனைடு கலந்து கொலை
அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆசிபா குடித்த காபியில் சயனைடு கலந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் ஆசிகாவின் கணவர் இம்ரான் கான், மாமியார் யாஸ்மின் உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் அம்பலமானது.
அதாவது, ரூ.20 இலட்சம் வரதட்சணைக்கான ஆஷிகா கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இம்ரான் கான் - ஆஷிகா பர்வீன் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு, இரண்டு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.
இதனிடையே, கணவர் திருமணத்திற்கு பின்னர் மனைவியின் வீட்டில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வருமாறு குடும்பத்துடன் சேர்ந்து கொடுமை செய்துள்ளார். இந்த விஷயத்திற்கு பெண் மறுப்பு தெரிவித்த காரணத்தால், இறுதியில் அவரின் காபியில் சயனைடு கலந்து கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 32 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!