மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியர்களிடம் வெகுவாக குறைந்த அந்த பழக்கம்.. உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த நிதி ஆயோக்..!
இந்தியர்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திருந்தாலும், முகக்கவசம் கட்டாயம். இல்லையேல் ஓமிக்ரான் வகை கொரோனா அதிகளவு பரவ வாய்ப்புள்ளது என நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையாக அதிகரித்து விடுபட்டது போல தோன்றிய நிலையில், ஓமிக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவ தொடங்கியது. இந்தியாவிலும் இவ்வகை வைரஸ் பரவியுள்ள நிலையில், மேலும் அது பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மத்திய நிதி ஆயோக் குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பேசிய மருத்துவர் வி.கே பால், "உலக சுகாதார நிறுவனம் முகக்கவசம் உபயோகம் செய்யாமல் இருப்பது குறித்து கடுமையாக எச்சரித்து இருக்கிறது. உலகமே ஓமிக்ரான் வகை வைரஸை தற்போது எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.
நாம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துயிருந்தாலும் முகக்கவசம் என்பது கட்டாயம் ஆகும். முகக்கவசத்தை இந்தியாவில் உபயோகம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நமது சுய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்.
வழக்கமான ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், உலகளவில் உள்ள சூழ்நிலையை நாம் கவனித்துக்கொண்டு இருக்கிறோம். உலகில் உள்ள பிற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து நாம் கற்றுக்கொண்டு, நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டும்.
ஓமிக்ரான் வகை வைரஸ் பரவுவதை நாம் மறந்தும் அனுமதித்து விடக்கூடாது. 5% கொரோனா பாதிப்பு விகிதம் இருந்தால், சம்பந்தப்பட்ட இடங்களில் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நவ. 24 ஆம் தேதி வரை 2 நாடுகளில் மட்டுமே பரவியிருந்த ஓமிக்ரான் வகை கொரோனா, தற்போது வெறும் 15 க்கும் மேற்பட்ட நாட்களில் 59 நாடுகளுக்கு பரவியுள்ளது.
59 நாடுகளில் மொத்தமாக 2,936 பேர் ஓமிக்ரான் வகை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 78,054 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.