#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்: கோர்ட் உத்தரவு..!
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகிலுள்ள ராமநகர் மாவட்டம், பிடதி பகுதியில் சாமியார் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், அவரது ஆசிரமத்தில் உள்ள பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி காவல் நிலையத்தில் சாமியார் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த பாலியல் தொல்லை வழக்கின் விசாரணை, ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ,சாமியார் நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டு இருந்தது. பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்த வழக்கு, நேற்று ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாமியார் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.