மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
48 ஆண்டுகளில் 1,2...அல்ல 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது...
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 48 ஆண்டுகளில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறித்த நபர் முதலில் 1982 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை மணந்துள்ளார். பின் அந்த பெண்ணுக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
அதனையடுத்து அந்த நபர் தான் ஒரு டாக்டர் என கூறி விவாகரத்தான பணக்கார பெண்களை திருமண இணைய மூலம் சந்தித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
கடைசியாக 14 ஆவதாக டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த நிலையில் அவரை பற்றிய உண்மை அந்த பெண்ணுக்கு தெரிந்துள்ளது. உடனே அந்த நபர் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.