மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை கொடூரமாக கொலை செய்து 300 துண்டுகளாக வெட்டி டிபன்பாக்ஸில் அடைத்த இராணுவ மருத்துவர்! வெளியான திடுக்கிடும் தகவல்.
இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சோம்நாத்(78)- உஷா ஸ்ரீ சமலை (61) தம்பதியினர். சோம்நாத் முன்னாள் இராணுவ மருத்துவராக இருந்தவர். இவர் தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது ஆத்திரத்தில் மனைவி உஷா ஸ்ரீயை தாக்கியுள்ளார்.
அதில் உஷா ஸ்ரீ மரணமடையவே அவரின் கணவர் மனைவியின் உடலை 300 துண்டுகளாக வெட்டி டிபன்பாக்ஸில் அடைத்துள்ளார். மேலும் துர்நாற்றம் வெளியில் வராமல் இருக்க அந்த பாக்ஸின் மீது பினாயிலை தெளித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வாழும் அந்த தம்பதியினரின் பிள்ளைகள் அவருக்கு தொடர்ந்து போன் செய்துள்ளனர்.
ஆனால் எந்த வித தகவலும் தெரியாததால் உறவினரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். உறவினர்கள் சென்று கதவை தட்டிய போது எந்த வித சத்தமும் இன்றி இருந்துள்ளது. அருகில் இருந்த ஜன்னலை திறந்துள்ளனர். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் வந்து சோதனை செய்ததில் சோம்நாத் தான் மனைவியை கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார். இந்த வழக்கானது கடந்த 6 வருடங்களாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது இதற்கு தகுந்த முடிவை கண்டுள்ளனர். தற்போது நீதிமன்றம் சோம்நாத்க்கு ஆயுள் தண்டனை விதித்து ரூபாய் 50,000 அபதாரம் வழங்கியுள்ளது.