மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒடிசா: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து... 5 பேர் பலி... 30 பேர் படுகாயம்... போலீசார் விசாரணை!!
ஒடிசா மாநிலம் பவானி புறத்திலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று மாலை புறப்பட்டுள்ளது. அந்த பேருந்தில் சிறுவர் முதல் பெரியவர் என மொத்தம் 60 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் பேருந்து இன்று காலை 6 மணியளவில் சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் வந்தது. அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று கவிழ்ந்துள்ளது.
அதில் பஸ்ஸில் பயணித்த தனேஷ்வர் (வயது 25) சுனை ஹரிஜன் (30) மற்றும் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.