மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நொடியில் நிகழ்ந்த விபத்து.. 7 பேர் பலி.. மனதை பதறவைக்கும் வீடியோ!
ஒடிசா அருகே அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் பீஜாபூர் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 15 பேர் பயணித்துள்ளனர். அப்போது அந்த சாலையின் மறுபுறம் 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோவை கடக்க முயன்ற போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீதும் எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது.
📌 Road Mishap at Bijapur Village Square near Boriguma in Koraput District - 3 Dead. #TNI #Insight #Odisha pic.twitter.com/Yau7eoULph
— The News Insight (TNI) (@TNITweet) January 26, 2024
இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோ மற்றும் கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனிடையே படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் மொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.