திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை... எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி!!
ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள ஜார்பாடா வனப்பகுதியில் சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் என்ற வாராந்திர ரெயில் சேவையானது இயங்கி வந்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வனப்பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுள்ளது.
அப்போது இரவு போயிண்டா மற்றும் ஜரபதா ரெயில் நிலையத்திற்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற போது எதிர்பாராத விதமாக எதிரே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை மீது மோதியுள்ளது. அதில் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து உடனே ரெயில் ஓட்டுனர் ஜரபாதா காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கவே வனத்துரை பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து யானையின் சடலத்தை கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.