திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பிணி பெண்ணுக்கு டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்.. திடீர் பவர்கட்டால் பரிதாபம்.!
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்ட சோகம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டம், போலாசரா பகுதியில் கர்ப்பிணி பெண்மணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள போலாசரா ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மின்விநியோகம் பழுதான காரணத்தால் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட பெண்மணி மற்றும் குழந்தை நலமுடன் உள்ளார்கள், மின்சாரம் இல்லாத பட்சத்தில் ஜெனரேட்டர் அல்லது பேட்டரி உதவியை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் அனைத்து மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.