திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 10 பேர் பலி.!
ஒடிசாவில் இடி மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வைத்துள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் பெய்த கன மழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று பெய்த மழையில் இடி மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.