திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செலவுக்காக மகனின் தோட்டத்தில் ஒரு காலிப்ளவர் எடுத்து விற்ற தாய்: கட்டிவைத்து அடித்த மகன்.!
ஒரிசா மாநிலத்தில் உள்ள சரஸ்பாஷி கிராமத்தைச் சார்ந்தவர் சுபத்ரா (வயது 60). இவர் கணவரை இழந்து வசித்து வருகிறார். சுபத்ராவுக்கு கருணா, சத்ருக்னா மகந்தா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
மூத்த மகன் கருணாவுடன் தாய் வசித்து வந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து போக்கிடம் இல்லாமல் சுபத்ரா இளைய மகனின் தோட்டத்தில் விளைந்த காலிஃப்ளவரை பறித்து விற்பனை செய்ததாக தெரிய வருகிறது.
இதனையறிந்து ஆத்திரமடைந்த இளையமகன் தனது தாயை ஈவு இறக்கமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த நிலையில், அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் காவல்துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது இரண்டாவது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.