மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒடிசா ரயில் விபத்து... காரணத்தை கூறிய ரயில்வே பாதுகாப்பு ஆணையம்..!!
ஒடிசா ரயில் விபத்துக்கு, தவறான சிக்னல் தான் காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் அருகே இருக்கும் பாகாநாகா பஜாரில் இருந்து ஜூன் மாதம் 2 ஆம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மூன்றும் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேலானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரயில் விபத்துக்கு காரணம் தவறான சிக்னல் அளிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில், லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது, என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.