மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த உணவை சாப்பிட்டால் ரூ.500 பரிசு! உணவகம் கொடுத்த அதிரடி ஆஃபர்! என்னனு பார்த்தீர்களா!!
ஆக்ராவில் தெருவோர சாட் உணவகம் ஒன்று ஒரே வாயில் சாட் உணவை சாப்பிட்டால் ரூ500 வழங்கப்படும் என வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியை அடுத்த ஆக்ராவில் தெருவோரத்தில் செயல்பட்டு வரும் சாட் உணவகம் ஒன்றில் தயாரிக்கப்படும் சாட் உணவு குறித்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பலவிதமான உணவுப் பொருட்களைப் போட்டு சாட் உணவு தயாரிக்கப்படுகிறது.
அனைவரும் ருசித்து சாப்பிடும்படி மிகவும் சுவையாக அந்த உணவைத் தயாரிக்கும் நிறுவனம் அங்கு சாப்பிடுபவர்களுக்கு புதிய பந்தயம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது அந்த சாட் உணவை ஒரே வாயில் சாப்பிடுபவர்களுக்கு ரூ500 பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அந்த உணவுப் பொருள் பெரிய அளவில் இருக்கும் என்பதை குறிப்பதற்காக, அதனை விளம்பரப்படுத்துவதற்காக இந்த வித்தியாசமான பந்தயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உணவை வாடிக்கையாளர்கள் சாப்பிடும் வீடியோவும் இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.