மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ கேட்கவே பதறுதே.. நடத்தையில் சந்தேகம்.. தூங்கிய மனைவி மீது மின்சாரம் செலுத்தி தீர்த்து கட்டிய கொடூர கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் ஹமீது - ஹாத்தூண் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஹமீதிற்க்கு தனது மனைவி நடத்தையில் தொடர் சந்தேகம் இருந்து வந்துள்ளது.
இதனால் அவர் தனது மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஹாத்தூண் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மின்சாரம் பாயச்செய்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் முகமது நதீம் தனது தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ஹாத்தூணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்வதை அறிந்த ஹாத்தூணின் கணவர் ஹமீது தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து ஹமீதின் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.