வேகமெடுக்கும் கொரோனா.! வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை.!



ompulsory home quarantine in assam

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது.

முதல் அலையை விட இது இன்னும் மோசமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது 10 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 2.50- லட்சத்திற்கும் மேல் ஒருநாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவாகி வருகிறது.

corona 

கொரோனா பரவல் அதிவேகத்தில் பரவி வருவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் தனிமைப்படுத்துதல் அவசியம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.