மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு காதலன், இரண்டு காதலிகள்; பேருந்து நிலையத்தில் அடித்துக் கொண்ட காதலிகள்.. தலைதெரிக்க ஓடிய காதலன்..!
மஹாராஷ்டிரா பைத்தான் மாவட்டத்தில் பேருந்து நிலைத்தில் காதலனுக்காக இரண்டு பெண்கள் அடித்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா பைத்தான் மாவட்டத்தில் இருக்கும் நெரிசலான பேருந்து நிலையத்தில், 17 வயது இளம்பெண்கள் இரண்டு பேர் திடீரென சண்டைப்போட ஆரம்பித்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அதில் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்து நிலையம் வந்துள்ளார். அந்த பெண்ணும் அவரது ஆண் நண்பரும் அங்கு பேசிக்கொண்டிருந்தனர். இதனை அறிந்த மற்றொரு பெண் பேருந்து நிலையம் வந்து இரண்டு பேரையும் தேடியுள்ளார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஆத்திரமடைந்தார். அந்த நபர் தன்னை காதலிப்பதாக சொல்லிவிட்டு வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகுவதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். விசாரத்த போது இருவரையும் அந்த இளைஞர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
இதனை அறிந்த அந்த பெண்கள், அவர்களுக்குள் சண்டை போட ஆரம்பித்தனர். அங்கு கூட்டம் கூடுவதை பார்த்த அந்த இளைஞர் யாருக்கும் தெரியாமல், தப்பி ஓடியுள்ளார். இதைபற்றி எல்லாம் கவலைபடாத அந்த இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.