சாலையிலேயே நமாஸ் செய்த இஸ்லாம் மாணவர்கள்! போராட்டத்தில் ஈடுபட்ட பிற மதத்தினர் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வீடியோ இதோ!



other religion student save islam people while prayer

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்தது.

மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.

delhi protest மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் தொடர்கிறது. மேலும் இதனால் பல பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்நிலையில், டெல்லியில் போராட்டத்திற்கு இடையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலின் வெளியே பல்கலைக்கழக இஸ்லாமிய  மாணவர்களும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சாலையிலே நமாஸ் செய்துள்ளனர். இந்நிலையில் பிற மதத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களைச் சுற்றி மனித சங்கிலியை உருவாக்கி அவர்களை பாதுகாத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.