மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் இந்து, இந்தியர்" - பப்ஜி காதலில் நொய்டா இளைஞரை கரம்பிடித்த பாக். பெண்மணி பேட்டி; புது அப்பாவுடன் மகிழ்ச்சியில் குழந்தைகள்.!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்மணி, தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் நேபாளம் வழியே சட்டவிரோதமாக நுழைந்தார். இவருக்கு பப்ஜி விளையாட்டில் இந்திய இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் வயப்பட்ட நிலையில், அங்கிருந்த தனது ரூ.12 இலட்சம் மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்து இந்தியா வந்தார்.
இந்தியா வந்த சீமா, தனது காதலர் சச்சினை கரம்பிடித்து உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த தகவலை அறிந்த உளவுத்துறை அதிகாரிகள் டெல்லி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகள் சீமா ஹைதர், அவரின் காதலன் சச்சின், சச்சினின் தந்தை ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் தற்போது சொந்த ஜாமினில் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில், நான் பாகிஸ்தான் செல்லமாட்டேன் என சீமா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "எனது கணவர் இந்து. அதனால் நானும் இந்து. நான் இந்தியராக உணர்கிறேன். பாகிஸ்தானுக்கு நான் செல்லமாட்டேன்" என தெரிவித்து இருக்கிறார். சீமா ஹைதரின் கணவர் தனது அன்பு மனைவியை மீட்டு தர வேண்டும் என அந்நாட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.