மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும்" சீமா ஹைதர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தீவிரவாத அமைப்புகள் பகிரங்க எச்சரிக்கை.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் வசித்து வந்த சீமா ஹைதர், கடந்த 2014ம் ஆண்டு காராச்சியில் திருமணம் செய்து கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பப்ஜி விளையாட்டு மூலமாக இவருக்கு உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்த சச்சின் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நாளடைவில் காதலிக்க, கணவரை பிரிந்த சீமா ஹைதர் தனது குழந்தைகளோடு நேபாளம் வந்து, அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து காதலரை திருமணம் செய்தார். இருவரும் கணவன் - மனைவியாக குடும்பம் நடத்த தொடங்கிய நிலையில், உளவுத்துறை இவ்விவகாரத்தை கண்டறிந்தனர்.
கடந்த 4ம் தேதி இருவரும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் காதல் ஜோடிக்கு ஜாமின் வழங்கியது. ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் என்றால் அங்காளி, பங்காளியாக சர்வதேச அரங்கில் கவனிக்கப்பட்டு வந்தது.
இந்த விவகாரம் பல சர்ச்சை மற்றும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசு சீமா ஹைதரை பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காத பட்சத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், சீமா ஹைதரை பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்காவிடில் 2008ல் நடந்த மும்பை தாக்குதல் மீண்டும் நடைபெறும் என எச்சரித்துள்ளார். இதனால் மும்பை காவல் துறையினர் மர்ம நபருக்கு வலைவீசியுள்ளனர்.