மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நடந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் நெகிழ்ச்சி பதிவு.!
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜையானது நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.
இந்நிலையில் பூமி பூஜை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தனது ட்விட்டரில் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். கடவுள் ராமரின் மகத்துவம் அவருடைய பெயரில் இல்லை, குணாதிசயத்தில் உள்ளது.
தீமைக்கு எதிரான போரில் வென்றதற்கான அடையாளம் அவர். உலகம் முழுக்க மகிழ்ச்சி அலை வீசுகிறது. இது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியில் தான் தான் இரண்டாவது இந்து வீரர் எனவும் கூறியுள்ளார்.