மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி.. பான் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.1 லட்சம் பணமா?.. இந்த லிங்க்-குள்ள போயிடாதீங்க..! எச்சரிக்கும் மத்திய அரசு..!!
வங்கி கணக்கு தொடர்பான பல பணப்பரிவர்த்தனைகளுக்கு தற்போது பான் கார்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய அரசு இதனை வழங்கியுள்ள நிலையில், பான் கார்டை வைத்து மோசடி சம்பவம் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் யூடியூப் சேனல் வீடியோக்களில் பான் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்குவதாகவும், இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட லிங்குகளை யாரேனும் கிளிக் செய்து முன்பதிவு செய்கிறோம் என்ற பெயரில் ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.