மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை.!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஹேமா லகண்டே. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால் இவருக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் அனைவரும் ஒன்றாக சாப்பிடும் போது பிறகு மாணவி செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் செல்போனை வைத்துவிட்டு ஒழுங்காக சாப்பிடு என்று கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி ஹேமா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.