பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மோடியின் கடைக்கண் பார்வையில் ஒரு ஏழை அமைச்சர்; யார் தெரியுமா? அவர்தான் ஒடிசாவின் மோடி.!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 354 இடங்கள் வரை வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.
நேற்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்ட பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் 2வது முறையாக பிரதமர் பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், 25 பேர் கேபினட் அமைச்சர்களாவும் 9 பேர் தனிப்பொறுப்பு அந்தஸ்திலான அமைச்சர்களாகவும், 24 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதில் பிரதாப் சந்திர சாரங்கிக்கு இணை அமைச்சர் பதவி வழங்கி பிரதமர் மோடி அவரை கௌரவித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றார். இவருக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் இவர் இன்றும் தனக்கு சொந்தமான மண்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார்.
மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய தலைவராக விளங்கும் இவர் தனக்கு சொந்தமாக சைக்கிள் ஒன்றினையே பயன்படுத்தி வருகிறார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மிகவும் எளிமையான முறையில் ஆட்டோவையே பயன்படுத்தினார். திருமணம் முடிக்காமல் தாயுடன் வாழ்ந்துவந்ததால், அவரை ஒடிசாவின் மோடி என்றும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகொண்டவர் என்பதால், அவரை குருஜி என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.