பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
மண் குடிசையிலிருந்து பாராளுமன்றம் செல்லும் சாமானியர்; குவியும் பாராட்டுகள்.!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 354 இடங்கள் வரை வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் ஒடிசாவின் பாலசூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் இவர் இன்றும் தனக்கு சொந்தமான மண்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார்.
பெரிய கட்சிகளில் சீட் வாங்கி பல கோடி ரூபாய் செலவு செய்தும் வெற்றி பெற முடியாத இன்றைய சூழலில் இவருடைய வெற்றி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனக்கு சொந்தமாக சைக்கிள் ஒன்றினையே பயன்படுத்தி வருகிறார். இளம் வயதிலிருந்தே ஆன்மிக நாட்டம் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி ராம கிருஷ்ணா மடத்தில் சந்யாசியாக சேர விரும்பியுள்ளார். அவரை விசாரித்த மடத்தை சேர்ந்தவர்கள், அவரது தாய் விதவை என அறிந்து, தாயாரை சென்று கவனிக்க சொல்லியுள்ளனர்.
இதையடுத்து தன்னை சுற்றியுள்ள பகுதிகளில் தன்னால் முடிந்த நல்ல விஷயங்கள் பலவற்றை செய்து வந்துள்ளார். 2014ல் பாஜக சார்பாக போட்டியிட்டு தோற்றாலும், இந்த முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.