#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! கட்சி மீது இப்படியொரு பக்தியா? குழந்தைக்கு வைத்துள்ள பெயரை பார்த்தீர்களா!
ராஜஸ்தான் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் அங்கு முதல்வர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலைபார்த்து வருகிறார். வினோத் ஜெயின் காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டராவார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவர் கட்சியின் மீதுள்ள பக்தியில் காங்கிரஸ் என்று பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழை இன்று மாநில அரசு வழங்கியுள்ளது. அதில் குழந்தையின் பெயரை காங்கிரஸ் ஜெயின் என பதிவிட்டுள்ளனர். அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக வினோத் ஜெயின் கூறியதாவது, எனது குழந்தைக்கு காங்கிரஸ் என பெயரிட முதலில் எனது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தான்தான் விடாமல் பிடிவாதமாக இந்த பெயரை வைத்தேன். எங்களது குடும்பம் காங்கிரஸ் கட்சியை சார்ந்தது. இந்த குழந்தையையும் 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.