மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வருமான வரி செலுத்தி திரும்ப பெற காத்திருக்கும் நபரா நீங்கள்?.. மோசடி கும்பலின் புது டெக்னீக் அம்பலம்.. உஷார்.!
தனியார் நிறுவனங்கள் மற்றும் வருமானவரி செலுத்தும் தனிநபர்கள் ஆண்டு கணக்கு முடிந்து, தகுதியுடையோர் வருமான வரி தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான நபர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடி செயலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அதாவது, வருமான வரியை செலுத்தி திரும்ப பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களை இவர்கள் குறிவைத்து இருக்கின்றனர். சாமானியர்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளன.
மோசடி கும்பல் வாட்சப் வழியே வருமான வரி செலுத்திய உங்களுக்கு குறிப்பிட்ட தொகையை திரும்பி அனுப்ப வங்கிக்கணக்கை கீழுள்ள லிங்கில் சென்று உறுதி செய்ய வேண்டும் என கேட்டு லிங்க் பகிரப்பட்டு வருகிறது.
இந்த லிங்கை கிளிக் செய்தால் நமது தனிப்பட்ட விபரங்களை பெற்று சைபர் குற்றவாளிகள் நமது பணத்தை திருட வாய்ப்புகள் அதிகம். அதனால் மேற்கூறிய செய்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.