மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுற்றுலா வந்தபோது மலர்ந்த காதல்.! வழிகாட்டியாக வந்த ஆட்டோ டிரைவரை மணந்த பெல்ஜியம் பெண்.! நெகிழ்ச்சி சம்பவம்!!
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டு இளம்பெண் தனக்கு வழிகாட்டியாக வந்த ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கெமில் என்பவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். அப்பொழுது அவர்களுக்கு வழிகாட்டியாக கர்நாடக மாநிலம் ஹம்பி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அனந்த்ராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தான் சுற்றிகாட்டும் ஒவ்வொரு பகுதிகளை குறித்தும் எளிமையாக புரியும்படி கெமிலின் குடும்பத்தினருக்கு எடுத்து கூறியுள்ளார்.
மேலும் அனந்த்ராஜின் குணம் கெமில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்து போயுள்ளது. இந்த நிலையில் கெமில் மற்றும் அனந்தராஜ் இருவரும் தங்களது தொலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து நட்பாக பேச துவங்கிய அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து இருவரும் அவரவர் குடும்பத்தினரிடையே கூறியுள்ளனர்.
அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 23ஆம் தேதி இந்து முறைப்படி கெமில் மற்றும் அனந்தராஜ்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் அண்மையில் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.