மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. சூப்பர்.. இனி தேவையில்லாத அழைப்புகள், மெசேஜ் வந்தால் ரூ.10,000 அபராதம்.! மத்திய அரசு அதிரடி.!
தற்போது செல்போன்கள் மனிதனின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் என்று பல கட்டமாக மாறுபட்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். கம்ப்யூட்டரில் செய்யும் அனைத்து வேலைகளையும் நம்மால் இப்பொழுது ஸ்மார்ட்போனில்செய்து முடிக்க முடியும். இதனால் மனிதர்கள் போனை தங்களது உடலின் ஒரு பாகம் போலவே கருதுகின்றனர்.
அனைவரும் செல்போன் வைத்திருப்பதால் பல நிறுவனங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே மக்களை தொடர்புகொண்டு வாடிக்கையாளர்களை அவர்களது பக்கம் ஈர்க்கின்றார்கள். தற்போது பொதுமக்களிடம் நூதன முறையில் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. சார்... உங்கள் கிரிடிட் கார்ட், டெபிட் கார்டு நம்பர் கொடுங்கள் சார். என அரைகுறை இந்தி- தமிழில் பேசி சிலரை நம்ப வைத்து பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.
அதையும் தாண்டி, தற்போது செல்போன்களுக்கு வரும் அழைப்புகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்களை குறிவைத்து, தினமும் அதிகப்படியான அழைப்புகள் வருகின்றது. சார்... கிரெடிட் கார்டு வேணுமா.? இன்சூரன்ஸ் வேணுமா.? இன்வர்ஸ்மண்ட் செயுறீங்களா.? டூர் பேக்கேஜ் வேணுமா.? என பல போன் அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற தொந்தரவு தரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதற்காக டிஜிட்டல் புலனாய்வு அமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பகுப்பாய்வு ஆகிய இரண்டு அமைப்புகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை நிறுவியுள்ளது. இந்த இரு அமைப்புகளும் தொந்தரவு தரும் அமைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும். இதுதொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தொந்தரவு தரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு ரூ.1,00ம் முதல் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் மீறல் தொடர்ந்தால், தொலைதொடர்பு இணைப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் அடையாளம் மற்றும் முகவரி ஆதாரம் 2 வருட காலத்திற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.