மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலியான வீடியோக்களை நம்பி மருத்துவ குழுவினரை அடித்து விரட்டிய ஊர் மக்கள்.. வைரல் வீடியோ!
மத்திய பிரதேசத்தின் இந்தோரில் ஒரே வாரத்தில் 70 பேருக்கும் மேலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறிய மற்றும் நெருக்கடியான பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லாதவர்கள்.
அப்படி ஒரு நெருக்கடியான பகுதியான தட்படி பஹல் பகுதியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் கொரோனா பாதித்து பலியானார். இறந்தவரின் குடும்பத்தினர் குறித்த விவரங்களை பெற மருத்துவர்கள், ASHA ஊழியர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த பகுதிக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளது.
முதலில் நன்றாக பேசத் துவங்கிய அந்த பகுதி மக்கள் திடீரென மருத்து குழுவினரை தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் தப்பி ஓடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மக்கள் இப்படி நடந்துகொண்டதற்கு காரணம் அவர்கள் மத்தியில் பரவிய போலியான வீடியோக்களே என தெரியவந்துள்ளது. அந்த வீடியோக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்து சென்று வைரஸை தாங்களுகவே உள்ளே செலுத்துகிறார்கள் என்று பரப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்த பகுதி மக்கள் அப்படி நடந்துள்ளனர் என கூறியுள்ளனர்.