திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் ஆரம்பித்தது வேட்டை.! பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு.!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல்- டீசல் விலை உச்சகட்டத்தை நெருங்கி பெட்ரோல் விலை ரூ.110 வரை உயர்ந்து, டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கியது.
சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில் நேற்று ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு 0.75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.