இலவசம்..இலவசம்..அறிவிக்கப்பட்ட அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம், பெட்ரோல் பங்கின் அதிரடி முயற்சி, ஏன் தெரியுமா ?



petrol punk announced new offer

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் பெருமளவு  சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடைபெற்றது.

இதன் விளைவாக ராஜஸ்தான், ஆந்திர மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிக்கு மாநில அரசால் விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்போது பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கும் மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்கி வருகிறது.

தலை சுற்றும் அளவிற்கு உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் மக்கள் பெட்ரோல் பங்க் பக்கமே போகவே யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் அதிரடியான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குபவர்களுக்கு,குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு பைக் வழங்கப்படும் எனவும், 5,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் செல்போன், இருசக்கர வாகனம் அல்லது கைக்கடிகாரம் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் 15,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு அலமாரி, சோஃபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் இலவசம்.

அதுவே 25,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் வாஷிங் மெஷின் இலவசம் என்றும் 50,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஏ.சி அல்லது லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 100 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் சில சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெட்ரோல் போடபெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.