திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜிப்மர் கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: விபரங்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
புதுச்சேரி ஜிப்மர் கல்வி நிறுவனத்தில் பல்வேறு துறைகளுக்கானகாலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் கல்வி நிறுவனத்தில் ( Jawaharlal Institute Of Postgraduate Medical Education & Research ) நர்சிங் அதிகாரி, எக்ஸ்-ரே டெக்னீஷியன் (ரேடியோதெரபி மற்றும் ரேடியோ-நோயறிதல்), ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என 139 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், பி.எஸ்.சி ரேடியோதெரபி மற்றும் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நர்சிங் ஆபீசர் பதவிக்கு 35 வயது, மற்ற பணியிடங்களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட அத்தனை பதவிகளுக்கும் அரசு விதிமுறைகளின் படி வயதில் தளர்வு உண்டு. ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விரிவான விபரங்களை https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணைதளத்தில் தெரிந்து கொள்ளளாம்.