மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை.! என்ன கூறினார் தெரியுமா?.!!
நடப்பு கூட்டத்தொடரில் அமளிகள் இருக்க கூடாது, அனைத்தையும் விவாதிப்போம் என பிரதமர் பேசினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது. இந்த குளிர்காலக்கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
பாராளுமன்றத்தில் நடைபெறும் அனைத்து விவாதத்திற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு செவிமடுத்து விவாதிக்க தயாராக உள்ளோம். வீண் அமளியை தவிர்த்து நாடாளுமன்ற மாண்பு மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அனைவருக்கும் மிகுந்த நன்றி" என்று தெரிவித்தார்.