மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பு: வாழ்த்து தெரிவித்த பாக்., பிரதமருக்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி..!
2024 மக்களவை தேர்தலில் வெற்றி அடைந்து, தொடர்ந்து 3 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசி வழிநடத்தும் பொறுப்பை ஏற்று இருக்கிறார். நேற்று இரவு 07:15 மணியளவில் குடியரசு தலைவரால் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு, இன்று தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாக். பிரதமர் வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் நவாஸ் செரீப், "மோடி ஜிக்கு எனது அன்பான வணக்கங்கள். மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் போது, சமீபத்திய தேர்தல்களில் உங்கள் கட்சியின் வெற்றி நம்பிக்கையை பிரதிபலிக்கிறது,
இதையும் படிங்க: #Breaking: தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி - பாஜக தேசிய தலைவர் நட்டா பாராட்டு.!
வெறுப்பை நம்பிக்கையுடன் மாற்றுவோம் மற்றும் தெற்காசியாவின் இரண்டு பில்லியன் மக்களின் தலைவிதியை வடிவமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவோம்" என கூறி இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தற்போது பதிலளித்து இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதில்
இதுகுறித்த பிரதமரின் எக்ஸ் பதிவில், "உங்கள் செய்தியைப் பாராட்டுகிறேன் நவாஸ் ஷெரீப் . இந்திய மக்கள் எப்போதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் முற்போக்கான சிந்தனைகளுக்காக நிற்கின்றனர். நமது மக்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் முன்னேற்றுவது எப்போதும் நமது முன்னுரிமையாக இருக்கும்" என கூறியுள்ளார்.
Appreciate your message @NawazSharifMNS. The people of India have always stood for peace, security and progressive ideas. Advancing the well-being and security of our people shall always remain our priority. https://t.co/PKK47YKAog
— Narendra Modi (@narendramodi) June 10, 2024
இதையும் படிங்க: "நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!