மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி - பாஜக தேசிய தலைவர் நட்டா பாராட்டு.!
2024 மக்களவை தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இன்று ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோருகிறார்.
இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய வளாகத்தில் தேசிய ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு, அவர் தலைமையில் ஆட்சி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: பதவியேற்க தயாராகும் பிரதமர் மோடி; அடுத்தடுத்து நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்.!
ஜேபி நட்டா பாராட்டு
இந்நிலையில், மைய வளாகத்தில் உரையாற்றிய ஜேபி நட்டா, "தேசத்தின் சேவைக்காக பிரதமர் தன்னை அர்பணித்துக்கொண்டுள்ளார். தேச கூட்டணி தலைவர்கள் அனைவரின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். 3 ம் முறையாக பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒடிசாவில் முதல் முறையும், அருணாச்சலில் 3 வது முறையும் பாஜக ஆட்சி அமைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக நாட்டில் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி யாராலும் எதிர்பார்க்க இயலாதது. அனைவருக்குமான வளர்ச்சியை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்" என பேசினார்.
இதையும் படிங்க: "நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!