மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவை புகழுரைத்து மோடி சூளுறைப்பேச்சு.. உலக நாடுகளே வியப்பு..!!
75 ஆவது சுதந்திர தினவிழாவானது சிறப்பாக, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் சுதந்திரதின விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மக்களிடையே உரையாற்றினார்.
இந்த உரையில், "உலகத்தின் நம்பிக்கையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் பிறப்பிடமாகவும் இந்தியா விளங்கி வருகிறது. நாட்டு மக்களின் ஆசையை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.
உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை வியந்து பார்க்கும் வண்ணம் மாறியுள்ளது. பன்முகத்தன்மையே இந்திய திருநாட்டில் மிகப்பெரிய பலமாகும். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. 100-வது சுதந்திர தினம் கொண்டாடும்போது நமது குறிக்கோள் நிறைவேறி இருக்கவேண்டும். அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.