திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIn : மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி.! சுதந்திர தின உரையில் பெருமிதம்.!
இன்று 77 வது சுதந்திர தினம் மிகவும் விசேஷமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருக்கும் தலைவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அங்கிருந்து டெல்லி செங்கோட்டைக்கு விரைந்த பிரதமர் மோடி, அங்கு முப்படைகள் மத்தியில் ராஜ மரியாதையுடன் தேசியக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செய்துவிட்டு தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பான கடைசி சுதந்திர தின விழா கொண்டாட்டம் என்பதால் பிரதமர் மோடி இந்த உரையாடலில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் தற்போது அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பாரம்பரிய ரீதியிலான திறமைகளை உள்ளடக்கிய நபர்களுக்கு உதவக்கூடிய வகையில் ஏறக்குறைய ₹.15 ஆயிரம் கோடி மதிப்பிலான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அடுத்த மாதம் முதல் செயல்படுத்த போவதாக அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசி வரும் அவர், இஸ்ரோவில் துவங்கி ஜி-20 மாநாடு முதல் நாட்டின் வளர்ச்சியிலும், கட்டமைப்பிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.