காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தீவிரவாதிகளுடன் ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
இந்திய ராணுவத்திற்கு அண்மையில் காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் வாகன சோதனையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர். அதில் இரண்டு பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் ஒருவர் ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் எனவும் தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளுடன் இருந்த தேவீந்தர் சிங் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். துணிச்சலான சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகளுடன் அந்த அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 தீவிரவாதிகளும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச்செல்ல அதிகாரி தேவிந்தர் சிங் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிர வீசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு ராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர். மேலும் தேவிந்தர் சிங்கின் ஸ்ரீநகர் வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஒரு ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.