மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிகளுக்கு ரிசார்ட்டில் நேர்ந்த கொடுமை... வசமாக சிக்கிய பஸ் டிரைவர்... வெளியான திடுக்கிடும் உண்மை.!
கேரள மாநிலம் வயநாட்டில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான முர்சித் முகமது என்ற இளைஞர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மலப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வயநாட்டில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வைத்து காவல்துறையினர் இவரை கைது செய்தனர். அப்போது இவருடன் பள்ளி சிறுமி ஒருவரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.
கோழிக்கோடு பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளை காதலிப்பது போல் நடித்து அவர்களை வயநாட்டிற்கு அழைத்து வந்து ரிசார்டில் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி மாணவிகளை அழைத்து வரும் இவர் மாலையில் பள்ளி நேரம் முடிவதற்குள் மீண்டும் அவர்களின் வீட்டின் அருகே சென்று விட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.